தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழக அரசு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு. ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு.

கேள்வியும் – விளக்கமும்…!

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்? தமிழ்நாடு அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிப்பாரா? – தயாநிதி மாறன் விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகைக் கட்டணம், டீ மற்றும் காபி உட்பட உணவு, விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவும் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளுநர் குறித்து […]

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதம்

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதமானது. விமானம் புறப்படத் தயாரானபோது விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு ஆளுநர் சென்ற இண்டிகோ விமானம் கோவைக்கு புறப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுப்பினார். இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார். நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை: பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம்

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார். யுஜிசி, தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம்

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் நீட் தேர்வு தேர்வு ரத்து செய்திடவும், தமிகத்திற்கு விலக்கு அளித்திடவேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாரிவுரிமை கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், இந்திய தேசிய லீக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இரண்டுமுறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவகல்லூரியில் இடம் கிடைக்காத விரத்தியிம் […]

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணம் நீட் பலிபீடத்தின் இறுதிமரணமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.