காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அணையில் இருக்கும் நீரைத்தான் எங்களால் வழங்க முடியும் என்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது 50,000 கனஅடி நீர் வருகிறது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு:

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்;
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தல்
சென்னை குடிநீர் ஏரிகளில் 63% நீர் இருப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 63% நீர் இருப்பு உள்ளது 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 7.407 டிஎம்சி நீர் உள்ளது
கடும் வறட்சியால் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டது

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால் தாமிரபரணி ஆற்றில் குடிநீருக்கு குறைந்தளவே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டு காணப்படுகிறது. அங்குள்ள உறைகிணறு அருகில் சிறிதளவே தண்ணீர் தேங்கியுள்ளது. முக்காணியில் சுமார் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த தரைமட்ட பாலமும், அதன் அருகில் புதிய […]