ராஜினாமா ஏன்?- குஷ்பு விளக்கம்

“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை” “கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன்” “கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை” “எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி”

புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

இது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர் கடிதத்தில், `சொந்த பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துவது நாகரீகம் அல்ல. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவுதாக உணர்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் விவகாரம் – பாஜக மாநில நிர்வாகி ராஜினாமா

மணிப்பூர் நிலைமை இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்” – பிகார் மாநில செய்தி தொடர்பாளர் வினோத் சர்மா. மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை விவகாரத்தை பாஜக சரியாக கையாளாததால் ராஜினாமா செய்வதாக நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்.