குரோம்பேட்டை நடேசன் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மதுரை மாவட்டம், யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தானமாக வழங்கிய உ.ஆயி அம்மாள் என்கிற பூரணம் தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி சிறப்பித்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளின் போது சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணைமேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.