பத்திரப்பதிவு துறையை தனியாக பிரிக்க திட்டம்

சென்னை: வணிக வரித்துறையுடன் சேர்த்து, ஒரே செயலர் தலைமையில் செயல்படும் பத்திரப்பதிவு துறையை, தனியாக பிரிப்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, 582 சார் – பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 54 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 10 மண்டல அலுவலகங்கள் உள்ளன. ஆண்டுக்கு, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. இதன் வாயிலாக, 17,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. அரசின் பல்வேறு […]

பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 30 வருடங்களாக ஆவண எழுத்தர் பணி செய்யும் சுந்தரேசன் ஓய்வூ பெற்றதை முன்னிட்டு அவருக்கு பம்மல் ஆவண எழுத்தர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் தலைமையிலும், மாநிலத் துணை செயலாளர் லயன்.கே.எம்.ஜே.அசோக் முன்னிலையிலும் பாராட்டுவிழா நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சுந்தரரேசன் தம்பதியினருக்கு ரூ.1,30,000/-& ம், பணமுடிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.

நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடக்கம்

ஆடிப்பெருக்கையொட்டி அதிகமான ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நடவடிக்கை சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளைய பதிவுக்காக வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.