பல்லாவரம் பகுதியில் 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

பல்லாவரம் தொகுதியில் 1, 2, 3 ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இ.கருணாநிதி எம்.எல்.ஏ புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கோ.காமராஜ் மண்டலக்குழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் புசிரா பானு நாசர், மங்கையர் திலகம் ராஜ்குமார், டிவி ராஜா, கீதா நாகராஜன், லதா சிவக்குமார், ரேணுகாதேவி பரமசிவம், மகேஸ்வரி கார்த்திகேயன், கலைச்செல்வி வெங்கடேசன், பிரேமலதா பண்டரி நாதன், முத்துக்குமார் மற்றும் […]

அனைத்து அட்டைகளுக்கும் பருப்பு, எண்ணெய்-அமைச்சர் சக்கரபாணி

மே, ஜூனுக்கான பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். 3 ஆண்டில் ரூ.14,697 கோடியில் பருப்பு, ரூ.64.62 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. மே ஒதுக்கீடான 1.80 கோடி கிலோ பருப்பில் இதுவரை 1.37 கோடி கிலோ வழங்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்காக பருப்பு, பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷனில் பெற்றுக் கொள்ளலாம் – உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி..

புதியதாக 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்

புதியதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், புதிதாக ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.

நியாய விலை கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் கடை விற்பனையாளர்கள் கெடுபிடி.

கைரேகை பதிவானால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறி வருவதால் பொதுமக்கள் அவதி. கடந்த ஆண்டுகளைப் போல அரிசி குடும்ப அட்டை இருந்தால் ரொக்க பணத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்