சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது. தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி விலை குறைந்தது!

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு 40 குறைந்து, ₹80 மற்றும் ₹90க்கு விற்பனை! நேற்று ₹130க்கு விற்பனையான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்துவந்த தக்காளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிலோ ₹100க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ ₹100 வரை குறைந்துள்ளது. […]

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 20 விலை உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் ரூ.140 முதல் ரூ.150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.