போலிஸ் என்று கூறிக்கொண்டு, சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவைச்சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல்நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்..???சட்டம் எதற்கு? போலிஸ் எதற்கு?நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு?என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளான நடிகை ரஞ்சனா நாச்சியார், ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ […]