அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை ரூ.1800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது; ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அடுத்த 2 கட்டங்களில் ரூ.870 கோடி செலவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது.

நல்லிணக்க அடையாளம் : குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’எனப் பெயரிட்ட இஸ்லாமிய பெண்

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை தினத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என இஸ்ஸாமிய பெண் ஒருவா் பெயா் சூட்டினாா். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் இந்தப் பெயரைச் சூட்டியதாக அவா் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஃபெரோசாபாத் மாவட்ட மகளிா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக திங்கள்கிழமை (ஜன. 22) அனுமதிக்கப்பட்ட ஃபா்சானா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அயோத்தியில் ராமா் கோயில் பிரதிஷ்டை தினத்தில் பிறந்த குழந்தைக்கு அத்தினத்தை நினைவுகூரும் வகையில் பெயா் […]

பிரதமர் மோடிக்கு அயோத்தி ராமர் கோயில் வடிவிலான வெள்ளி சிலையை யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு நினைவு பரிசாக வெள்ளியில் செய்யப்பட்ட ராமர் கோயிலின் மாதிரியை உ.பி. முதல்வர் வழங்கினார்.

ராமர் கோவில் சாட்சியாக பாரத தேசத்தை உலகின் உச்சிக்கே கொண்டு செல்வோம் என்று சபதமேற்கிறோம்

அதற்கு ராமபிரான் துணை நிற்பார் என்று கூறி பிரதமர் மோடி உரையை முடித்தார்.45 நிமிட ஆவேச உரையில் நம் நாட்டை பற்றி குறிப்பிடும்போதெல்லாம் பாரதம் என்றே மோடி குறிப்பிட்டார்.பேசி முடித்ததும் முன்வரிசை பிரமுகர்களை சந்தித்து கை கூப்பி நன்றி தெரிவித்தார்.உடன் உ.பி. கவர்னர் ஆனந்திபென் , முதல்வர் ஆதித்யநாத் சென்றனர்.கூடியிருந்த மக்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர்.நாலாபுரமும் சுற்றி சுற்றி வந்தார்.

அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது 5 வயது பாலகனாக அருள்பாலிக்கும் பால ராமர்

தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்றது என் பாக்கியம் – பிரதமர் மோடி பால ராமர் பிராண பிரதிஷ்டை செய்தது உணர்ச்சிகரமான தருணம் – பிரதமர் மோடி பால ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்ட மோடி ட்விட்டரில் பதிவு அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமர் விக்ரஹத்தின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். மந்திரங்களை உச்சரித்தபடி குழந்தை ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது.

குழந்தை ராமர் விக்ரகம் பிரதிஷ்ட்டை செய்ய்பபட்டது

ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும், யோகி ஆதித்யநாத்தும் ராமரின் பாதங்களில் மலர் தூவி வணங்கினர்.

அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சென்றார்

முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ரஜினிக்கு ஒதுக்கப்பட்டு, அவர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் குடும்பத்தினரை அங்கிருந்த நிர்வாகி ஒருவரிடம் ரஜினி காட்டி அவர்களையும் தன் அருகில் வர வழிவகுக்கும் படி கேட்டுக் கொண்டார்.