ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்?
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது . அது வெளிநாட்டில் உருவானது என்று ராமதாஸ் தெரிவித்தார். தற்போது அந்த கருவியை வைத்தது யார் என்று ஆய்வு நடப்பதாக தெரிவித்தார்.
பாமக தலைவர் யார்? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ், அன்புமணி மோதல்
அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் தானே தலைவராக செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியின் பொதுக்குழு மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர் எனத் தெரிவித்தார் இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது தொடர்ந்து நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் ராமதாஸ் கையெழுத்திடும் வகையில் தீர்மானம் […]
ராமதாஸ் இல்லாத நேரத்தில் தாயை சந்தித்த அன்புமணி.
பாமக பொருளாளர் நீக்கம் | ராமதாஸ் அதிரடி .
பாமகவில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்து விட்டது .அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதில் கொடுக்க இன்று அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளராக மாறிய பொருளாளர் திலகபாமாவை கட்சியை விட்டு நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்
ஆசிரியர்களை ஏமாற்றிய அரசு – ராமதாஸ்

அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் போராடும் நிலையில், பேச்சுவார்த்தை எனக் கூறி தமிழக அரசு ஏமாற்றிவிட்டது. 243 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் பதவி உயர்வு வாய்ப்புகள் பறிப்பு. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தாம்பரத்தில் நடந்த விழாவில் வழக்கறிஞர் ராமதாசுக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது

சங்கத் தலைவர் டாக்டர் சரவணக்குமார், செயலாளர் டாக்டர் சக்திஷ், நிதிச் செயலாளர் டாக்டர் பிரசாந்த் பாண்டியன் மற்றும் வி.சந்தானம் மற்றும் நிர்வாகிகள் இதனை வழங்கினர்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்

வைகோ விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்ற அரசியல் பணியை தொடர வேண்டும் என விரும்புகிறேன் என ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு!

சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன!
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும்: ராமதாஸ்

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா?- ராமதாஸ் கண்டனம்

சென்னை: மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 234 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை குத்தகை முறையில் அமர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்குவதற்குள்ளாக, விழுப்புரம் கோட்ட அரசு […]