அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்த பாமக சிறப்பு பொதுக் குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் தகவல்.
ஸ்டாலின் போல அமைதியாக இரு- அன்புமணிக்கு ராமதாஸ் புத்திமதி
கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
பா.ம.க. மோதலில் திமுக தலையீடு என்பது அப்பட்டமான பொய் -ராமதாஸ் பேட்டி
பாமகவில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது .இந்த மோதலில் திமுக தலையீடு இருப்பதாக ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அது அப்பட்டமான பொய் கடைந்தெடுத்த பொய் என்று கூறினார் அன்புமணி குறித்த கேள்விக்கு எல்லாம் போகப் போக தெரியும் என்று பாட்டு பாடி காட்டினார்.