ரக்ஷா பந்தன் – பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

டெல்லியில் பள்ளி குழந்தைகளிடம் ராக்கி கட்டிக்கொண்ட பிரதமர் மோடி ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து “உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் செழிப்பையும் கொண்டு வரட்டும்”
நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் கொண்டாட்டம்

உடன்பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதர அன்பை பரிமாறிக்கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்சாபந்தன் விழாவை நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின் பாசபந்தம்தான் சகோதரன்-சகோதரி உறவு ஒரே தாயிடம் பிறந்து ஒன்றாக வளர்ந்து, அன்புக்கும் அரவணைப்புக்கும் பிணைப்புக்கும் ஆளாகும் உறவை , மேலும் பலப்படுத்தி இனிக்கவைக்கும் திருவிழா ரக்சாபந்தன்.உடன்பிறவா தசகோதர-சகோதரிகளும் தங்களுக்குள் பாசத்தை , அன்பை, நெருக்கத்தை உறுதி படுத்திக்கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக […]