ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டு இருப்பார்

– முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“ரஜினிக்கு லாபப் பகிர்வு ரூ.100 கோடி”

ஜெயிலர் படம் மூலம் 22 நாட்களில் 625 கோடி ரூபாய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்ததால் லாப பகிர்வு தொகையாக ரூ. 100 கோடிக்கான காசோலையை ரஜினிக்கு கலாநிதிமாறன் வழங்கியதாக தகவல். ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக ரஜினி ஊதியம் ரூ. 110 கோடி பெற்றார். தற்போது ரூ. 100 கோடி கிடைத்ததால் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக மொத்தம் 210 கோடி ரூபாய் ரஜினிக்கு கிடைத்ததாக தகவல்.
“ரூ.500 கோடியை நெருங்கிய ஜெயிலர்!”

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ.492.50 கோடி வசூல் என தகவல்! தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.142 கோடி வசூல் செய்துள்ளது.
மகா அவதார் பாபாஜி குகையில் ரஜினிகாந்த்

உத்தரகாண்ட்: சுமார் 2 மணி நேர மலையேற்றத்திற்கு பின் மகா அவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் முதல் படம் வெளியானது ஆகஸ்ட் 15 என்பதும், பாபா திரைப்படம் வெளியாக 21 ஆண்டுகள் நிறைவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 4 நாள்கள் வசூல் எவ்வளவு

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் 4 நாள்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும்7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் மட்டும் இப்படம் ரூ.95.78 கோடி வசூல் ஈட்டிய நிலையில், முதல் வாரத்தின் இறுதி நாள்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 4 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. […]
ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தசரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்!
மீண்டும் சொதப்பினாரா நெல்சன்?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதனால் தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்ய ரஜினி நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டார். கடைசியாக நெல்சன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே […]
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 10ம் தேதி ரிலீஸ்;
நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடிகர் ரஜினி

திருவண்ணாமலை வந்த நடிகர் ரஜினி, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவை சந்தித்தார்