நடிகர் ரஜினி அண்ணனுக்கு தீடிர் மாரடைப்பு
ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடி சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினிகாந்த் பெங்களூர் வந்துள்ளார்.
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம்
ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறார். கமல்ஹாசன். சுந்தர்.சி இதனை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு. வெளியாகி உள்ளது.பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது 1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக ‘அருணாச்சலம்’ படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி., 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்புக்கு முழுக்கு ?
நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் இதற்கான கதை கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதை நெல்சன் இயக்குவார் என்றும் 2027-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறதுஇந்த படத்தில் நடித்த பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்படுகிறது
ரஜினி படத்தில்நடிகர் பாலகிருஷ்ணா.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து. வருகிறார் இந்த படத்தில் ஏற்கனவே நடித்த மோகன்லால் தவிர எஸ்.ஜே சூர்யாவும் சேர்ந்து நடிக்கிறார்கள்.இது தமிழ், , தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதன் காரணமாக மேலும் ஒரு சூப்பர் ஸ்டாரை இந்த படத்தில் இணைக்கிறார்கள். அவர்தான் ஆந்திர நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் ஜனாதிபதி விருது பெற்றவர் .இந்த படத்தில் நடிக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டது உடல் நலம் தேறிய நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் இன்று காலை மருத்துவப் பரிசோதனை நடந்ததாக தகவல் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குநடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து!

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் […]
வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததால் ஓய்வு எடுக்க அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் புறப்பட்டார் ரஜினிகாந்த் ஒரு வாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டம் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை கண்டதும் உற்சாகமாக முழக்கமிட்ட ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில்

தன்னுடைய அனுமதியின்றி ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்