பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
மிகவும் மரியாதைக்குரிய,என் அன்பான பிரதமர் நரேந்திர மோடி ஜி,உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்
ரஜினி படத்தில் கமல் நடிப்பாரா?
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி திரைப்படத்தில் கமலஹாசன் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன ஆனால் இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக மறுத்தார்.இது ரஜினிகாந்த் படம் நினைவில் அதில் கமல் நடிக்க இயலாது அதேபோல கமலுக்கான படத்தில் ரஜினி நடிக்க இயலாது என்று அவர் கூறினார்
ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் பாராளுமன்ற மேல் சபை எம்பி ஆகி உள்ளார் .விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்க உள்ளது. இதற்காக டெல்லி செல்லும் அவர் முதலில் எம்பியாக பதவி ஏற்கிறார். தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் . இந்த நிலையில் அவர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்
ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் : உதயநிதி

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடி வயிறுக்கு அருகில் ரஜினிக்கு ஸ்டெண்ட்

நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இருதய மருத்துவர் சாய் சுதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தோல்வியில் இருந்து ரஜினி மீண்டு வர உதவிய இயக்குநர்கள்

தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துவரும் ரஜினி, பல தோல்வி படங்களையும் வழங்கியுள்ளார். அந்த நேரங்களில் அவருக்கு சில இயக்குநர்கள் கைகொடுத்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர்கள் பாலச்சந்தர், முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஷங்கர் ஆகியோர் தோல்வியில் இருந்து மீண்டு வர உதவியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க கோரி பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

ஒரு வாரத்தில் தேனாம்பேட்டை போலீசார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கமலுக்கு ரஜினி அறிவுரை

கமர்சியல் படம் என்ற பெயரில் ஆபாசம் கலக்காமல் படம் எடுக்க வேண்டும். விக்ரம் படத்தை நகலாக எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டாலும், குடும்பத்துடன் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. விக்ரம் படத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச காட்சிகளை திணித்ததற்கு ரஜினி அட்வைஸ்