மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]