மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]
தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது

கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இக்காலகட்டத்தில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. வடமாநிலங்களில் கடந்த வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. சில தினங்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
“நீலகிரி, கோவை மலை பகுதியில் இன்றைய தினம் கன முதல் மிக கனமழை பெய்யும்”

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் “நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும்” இன்றைய தினம் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இன்றைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் “நாளைய தினம் நீலகிரி, கோவை மலை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்”
சென்னையில் மழை – 26 விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் 2வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு 12 விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன – 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
கனமழை எதிரொலி கார் விற்பனை மைய சுவர் இடிந்தது

இரவு பெய்த கனமழையால் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை மையம் சுற்றுசுவர் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு இரவு சென்னை புறநகர் பகுதியுல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்த நிலையில் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை நிலைய பின்பக்கத்தில் 6 உயரம், 60 நிலமுள்ள சுற்றுசுவர் அடியோடு பெயந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இதுவரை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தொடக்கம்! வழக்கத்துக்கு மாறானது!!

நாடு முழுவதும் நான்கு மாத கால பருவமழைக் காலமான, தென் மேற்குப் பருவமழை, கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என ஒரே நேரத்தில் தொடங்கியிருக்கிறது. நாட்டின் ஒரு பக்கம் வரலாறு காணாத வகையில் கடுமையான வெயிலும், மறுபக்கம் கனமழையும் பெய்து வரும் நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு இரண்டு நாள்கள் முன்னதாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை […]
தமிழ்நாட்டில் ஜூன் 1ல் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஜூன் 1ல் கனமழை பெய்யக்கூடும். கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு

வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.
கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, அருமனை, களியல், திற்பரப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.