தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 7 முதல் 11 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆக. 14, 15 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

“பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி தொடர நடவடிக்கை”

கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை தொடர நடவடிக்கை. வீடுகளை இழந்த மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ யாரும் நேரில் வர வேண்டாம். இறந்தோரின் உடல்களை பெற குடும்பத்தில் ஓரிருவர் மட்டுமே வந்தால்போதும் – கேரள முதல்வர் பினராயி விஜயன். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அமித்ஷா குற்றச்சாட்டு – பினராயி விஜயன் மறுப்பு

அதிகனமழை பெய்யும் என 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் குற்றச்சாட்டு. வயநாடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதில்.

மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை, சூரமலை நகரங்கள்: பேர் சொல்லக்கூட ஊர் இல்லை

வயநாடு:சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை பகுதிகள், நிலச்சரிவு காரணமாக இடிந்த கட்டடங்கள், சேறு நிறைந்த பள்ளங்கள், பாறைகள் நிறைந்த விரிசல் நிலமாக காணப்படுகிறது. இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என அவரது உறவினர்கள் தேடி வருகின்றனர். வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரமலை ஆகிய நகரங்கள் மக்கள் நடமாட்டம் காரணமாக கடைகள் மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளால் சூழ்ந்து காணப்பட்டது. உட்புற தோற்றம் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற சூரமலா, சுற்றுலா பயணிகளின் […]

கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை

“கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது” “குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம்” “எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை” – மத்திய அமைச்சர் அமித்ஷா

ஆறு நாட்களுக்கு முன்பாகவே கேரளா அரசிற்கு கடும் மழை பொழிவு தொடர்பான எச்சரிக்கை மத்திய அரசு கொடுத்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

23 ஜூலை அன்று நாங்கள் எச்சரிக்கை கொடுத்து இருந்தோம் என மாநிலங்களவையில் விளக்கம்

கேரளா: கனமழை காரணமாக பெருங்கல் குத்து அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது