31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
BREAKING | அரக்கோணத்தில் இருந்து 5 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை 5 மாவட்டங்களுக்கு விரைகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைகிறது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா உள்பட 5 மாவட்டங்களுக்கு மீட்புக் குழு விரைகிறது.
தமிழகத்தில் 26ம் தேதி மிக கனமழை

“தென் தமிழகத்தில் வருகிற 26ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு” இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை “தென் தமிழகத்தில் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” “கடலோர ஆந்திரா, ஏனாம், கேரளா, மாகே பகுதிகளில் வரும் 26, 27 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு” “நிக்கோபார் தீவுகளில் 22 முதல் 24 வரை கனமழைக்கு வாய்ப்பு” “ராயலசீமாவில் 26 மற்றும் 27 ஆம் தேதி கனமழை பெய்யும்”
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை […]
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர்

கனமழை காரணமாக வீடுகளை இழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் இந்திய ராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டனர். ஐஏடிஎன்
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர்

கனமழை காரணமாக வீடுகளை இழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, நெல்லை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
செம்பாக்கம் மண்டலம் 39 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் கட்டன் கால்வாய் பணிகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்

மேலும் மழைக்காலத்திற்கு முன்பாகவே கால்வாய் பணிகளை துரித நடவடிக்கை கொண்டு முடித்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி முதன்மை செயல் பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை அவரிடம் பரிந்துரைத்து மக்கள் நலப் பணிகளை செவ்வனே முடித்து […]