கனமழை எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டது

மறு அறிவிப்பு வரும் வரை குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் […]

கிழக்கு கடற்கரையில் கடல் கொந்தளிப்பு

பெஞ்சல் புயல் இன்று மாலையை கரையைக் கடக்கக் கூடிய கிழக்கு கடற்கரை சாலை பகுத்இ கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக பேரலைகள் சீறி எழுகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,745 கனஅடி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து காலை 449 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,745 கனஅடியாக உயர்வு; ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,313 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது; 4 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8 மடங்கு அதிகரித்துள்ளது

1மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பகல் 1 மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திலும் கனமழை தொடரும் -வானிலை ஆய்வு மையம்

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இடைவிடாது பெய்யும் கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

சென்னைக்கு வந்த விமானம் மோசமான வானிலையால் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 1 வரை அதீத கனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை.