திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவில் புதைந்த வீடுகளுக்குள் 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் […]

7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. […]

ஏரிகள் உடைப்பு தத்தளிக்கும் விழுப்புரம்; ரயில்கள் பாதியில் நிறுத்தம்; பயணிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகளை அழைத்து வர சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து […]

விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்​தின் விழுப்பு​ரம், கடலூர், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களும், புதுச்​சேரி​யும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் அதிகபட்​சமாக 51 செ.மீ. மழை கொட்​டிய​தால், பல பகுதிகள் வெள்​ளக்​காடாகின. பாதிக்​கப்​பட்ட பகுதி​களில் ராணுவத்​தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர். வங்கக்​கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]

தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்

சென்னையில் மின்சார ரயில் சேவையில் தாமதம்

சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் வராததால் சுமார் ஒருமணிநேரம் ரயில்கள் இன்றி பயணிகள் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். ரயில் சேவை குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் மின்சார ரயில்சேவை தாமதமாகி வருகிறது.

மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் – தமிழக அரசு

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றில் வெள்ளம் – 8,000 கனஅடிநீர் வெளியேற்றம்

சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு அடையாறு ஆற்றில் பாய்ந்தோடும் 8,000 கனஅடி நீர் முடிச்சூர் மணிமங்கலம் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள கார்கள் கனமழையால் அடையாறு ஆற்றில் 8 ஆயிரம் கன அடி வெள்ள நீர் செல்கிறது அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது​

பறக்கும் ரயில் சேவை ரத்து.

சென்னையில் பலத்து காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. ரயில் சேவை தொடர்பான தகவலுக்கு 044-25330952, 044-25330953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.