திண்டுக்கல், மதுரை, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 4050 கன அடியாக உள்ளது

அணையின் நீர்மட்டம் 119 அடியில் தற்போது 117 அடியாக உள்ளது.அணையில் இருந்து தற்போது 1950 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, விருதுநகர்,ராமநாதபுரம், மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு;

மெயின் அருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை; ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம், புலி அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி
தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, […]
செம்பாக்கத்தில் வெள்ள மீட்பு பணிக்கு எந்திரங்கள் தயார்

தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலம், செம்பாக்கம், காமராஜபுரம், சிட்லப்பாக்கம், திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மீட்பு பணிகளுகாக உபகரணங்களாக மரம் வெட்டும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மோட்டார், மணல் மூட்டைகள், ஜே.சி.பி இயந்திரங்கள், லாரிகள், டார்ச் லைட், குடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயார் படுத்தப்பட்ட நிலையில் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தயாரக இயக்கி பார்த்தனர்.
தமிழகத்தின் அடுத்து வரும் 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இலங்கை, அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும்தெற்கு வங்கக்கடல் பகுதியில் தலா ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 7 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆகிய 13 மாவட்டங்களில் இன்றும் வரும் 3 […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை: கடனா அணை நீர்மட்டம் மேலும் 1 அடி அதிகரிப்பு

நெல்லை:நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முழுவதும் கனமழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 2 அணைகளுக்கும் வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர் மழையால் இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 746 கனஅடியாக அதிகரித்தது.பிரதான அணையான பாபநாசம் அணையில் 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 37 மில்லி […]
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்