வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது

தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது; வரும் 26-ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு”

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது – பாலச்சந்திரன் திருப்பூரில் 17 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது – பாலச்சந்திரன்

தென் கடலோர மாவட்டங்களில்மிக கனமழை எச்சரிக்கை

தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி காற்று சுழற்சி நகர்வதால் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் இன்று இரவு பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களை பொறுத்தவரை நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகலாம். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் […]

வடகிழக்கு பருவமழையில் இதுதான் முதல் நிகழ்வு.. 16-ம் தேதி வரை தாக்கம் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்

கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி இது தான் என்றும் இதன் தாக்கம் 16 ஆம் தேதி காலை வரை இருக்கும் என்று கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கினாலும் தொடக்கத்தில் பெரிய அளவில் மழை எதுவும் […]

கனமழை, மோசமான வானிலை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

தொடர் மழை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி சென்றாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய […]

இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இலங்கையின் தென் பகுதியில் கொழும்புவில் இருந்து சுமார் 1,326 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கபடவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. கொழும்பு நகரில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டதாக தகவல் […]

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று உருவான தாழ்வு பகுதியானது தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவியது. இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. மேலும் குமரி கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது […]