“நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்”

சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் “அதிக நிலச்சரிவு கோவை மாவட்ட எல்லையில் நிகழ்ந்து உள்ளது”

தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை நெருங்கும் வைகை அணை

வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு வைகை அணைக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது- பொதுப்பணித்துறை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் நீர் திறப்பு

சபரிமலைக்கு ரெட் அலர்ட்

கேரளாவின் சபரிமலைக்கு மிக கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு தென்காசி – பள்ளிகளுக்கு இன்று விடுமுறை […]

கனமழை காரணமாக குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு

மண் சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் – ஊட்டி சாலையில் மண்சரிவு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம்

சூறைக்காற்றுடன் மழை குரோம்பேட்டை நடைமேடை கூரை பறந்தது

சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் விதமாகவும் ரயில் நிலையம் செல்வதற்க்கும் பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கபட்டுள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் இந்த நகரும் படிக்கட்டிகள் மூலம் ரயில் நிலையத்திற்க்கும், ரயில் நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலை வருவதற்க்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரும் […]

புதுச்சேரி: மழை காரணமாக, கடற்கரை சாலையில் பொது மக்களுக்கு போலீசார் தடை

கடற்கரை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கடலில் குளிக்க தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை வெளி மாநிலத்தில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15% குறைவாக பெய்திருக்கிறது

அக்.1 முதல் இன்று வரை 24 செ.மீ மழை பதிவு; இக்காலகட்டத்தின் இயல்பு அளவு 31 செ.மீ சென்னையிலும் இயல்பை விட 30% குறைவாகவே மழை பெய்திருக்கிறது – வானிலை ஆய்வு மையம்

“நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு;

ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு”