திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19 செ.மீ மழை பதிவு

பொன்னேரி 14 செ.மீ,சோழவரம் 13 செ.மீ,செங்குன்றம் 12 செ.மீ,கும்மிடிப்பூண்டி 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்
தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை – அரக்கோணம், கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன அம்பத்தூர் – ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில்கள் 20 முதல் 30 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
25 மாவட்டங்களுக்கு மழை

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல் ,சேலம், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 25 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டில் விடுமுறை இல்லை: பள்ளிக்கு நனைந்து சென்ற மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். ஆனால் காலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர். மேலும் மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அழைத்து சென்றனர்…
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை

மதுரவாயல், போரூர், ஐயப்பன் தாங்கல், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால், வாகன ஓட்டிகள் அவதி முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்கின்றன வாகனங்கள்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது
கேரளாவில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை – மத்திய வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் கனமழை தொடரும் – பாலச்சந்திரன்

தமிழ்நாட்டில் 2 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது வங்கக் கடலில் 26ஆம் தேதி சூறாவளிக்காற்று வீசக்கூடும் ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் – பாலச்சந்திரன்