15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு

வங்கக்கடலில் புயல் உருவானதால் மக்களின் பாதுகாப்பை உறுதிசொய்ய நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களுக்கு கடிதம்.
தமிழகத்தில் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

“தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்” காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 48 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் வானிலை ஆய்வு மையம் தகவல்
தாம்பரம் : நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், ரயில்வே சுரங்கபாதையில் தற்போது மழைநீர் முழுமையாக அகற்றம் – வாகன போக்குவரத்து சீராக உள்ளது!
சென்னையில் கனமழையால் விமான சேவை பாதிப்பு

கனமழை காரணமாக 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன
தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

வானிலை ஆய்வு மையம் தகவல்
கல்லுரி மாணவர்கள் குழப்பம்
சென்னை , காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுரி இரண்டிற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது… இந்நிலையில் கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் இருப்பதால், சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
“16,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் கமாண்டோக்கள் தயார் நிலையில் உள்ளனர்!”