தாம்பரம் வந்துள்ள தேசிய பேரிடர் மிட்பு குழுவை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா ஐ.ஏ.எஸ்

நேரில் சென்று அவர்களுடம் மீட்பு பணிகள் குறித்தும், தகவல் பறிமாற்றம், தேவையான உபகரணங்கள், வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார், இரவு அல்லது நாலை கன மழை பெய்தால் தேசிய பேரிடர் மிட்பு குழு வினர் மிட்புபணியில் ஈடுபடவுள்ளனர்.

தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம், நோயாளிகள் அவதி

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தில் முழுவதும் மழைநீர் சூழ்துள்ளதால் வெளிநோயாளிகள், பார்வையாளர்கள் மருத்துவமனை சென்று வரமுடியாமல் மழைநீரில் நடந்துசென்றனர். மேலும் அங்கு பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆகாயதாமரை செடிகள் சூழ்ந்த நிலையில் உள்ளதால் நாள் பார்பதற்கு குளம்போல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே தாழ்வான பகுதியான இந்த மருத்துவமனையில் அருகாமையில் உள்ள பச்சமலை நீர் இப்பகுதியில் தேங்கி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிறிய […]

பள்ளி குழந்தையுடன் ஸ்கூட்டரில் மழை நீரில் விழுந்த தாய் 200 பேர் விழுந்த பரிதாபம்

மேடவாக்கத்தில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் ஸ்கூட்டரில் செல்லும்போது மழை நீரில் கீழே விழுந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேடவாக்கம், வி.ஜி.பி பாபு நகர் முதல் மெயின்ரோட்டில் மேடவாக்கம் பஜார் தண்ணீர் மொத்தமும் இங்கே குவிந்துள்ளது. பெரிய பள்ளம் ஏற்பட்டு குளம்போல் நீர் தேங்கி உள்ளதால் 2 நாளில் சுமார் 200 பேருக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்துள்ளனர். மேலும் இன்று பள்ளி சென்று குழந்தையை அழைத்து வந்த தாய் […]

மேடவாக்கம் அடுத்த அரசன்கழனியில் மழைநீர் கால்வாயில் பயணிகளுடன் விழுந்த ஆட்டோ

மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் முடுகால்வாயில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் விழுந்து லேசானகாயம், விழுந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் நீரில் சிலமணி நேரம் மிதந்த ஆட்டோவை அங்குள்ள பணியளர்கள் மீட்டனர். கால்வாயில் ஒரு பகுதி திறந்துவைக்கப்பட்டதால் ஆட்டோ கவிந்து விபத்து ஏற்பட்டுள்ளது..

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு

வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது விபரீதம்; மழை நீரில் செல்போனில் பேசி கொண்டு சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தற்போது பெய்து வரும்‌ வடகிழக்குப்‌ பருவமழை

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தற்போது பெய்து வரும்‌ வடகிழக்குப்‌ பருவமழையின்‌ காரணமாக முன்னனச்சரிக்கை மற்றும்‌ பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர்‌ மீட்புக்‌ குழுவினர்‌ தயார்நிலையில்‌ இருப்பதை தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா (30.11.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வரும் 2-ம் தேதி புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 3ம் தேதி புயல் உருவாகிறது. டிச.3-ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும். டிச.4-ம் தேதி அதிகாலை வங்கக்கடலில் உருவாகும் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், 8 விமானங்கள் ரத்து

15 விமானங்கள் கால தாமதம்,சேலம், ஆந்திரா, அபுதாபி, இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், ஹூப்ளி, டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் தாமதம்

சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழப்பு

சென்னை அசோக் நகர் லேக் வியூ சாலையில் சென்று கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார், இவர் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தாரா அல்லது மின்னல் தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை: தியாகராயநகர் வாணிமஹால் அருகே சென்று கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்பு அணீப் என்பவர் தேங்கிய மழைநீரில் ஏற்பட்ட மின்சாரக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.