தமிழகத்திற்கு 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (04-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ வடக்கு திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) காலை 0830 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) வடக்கு-வடகிழக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு […]