தமிழகத்திற்கு மழையை கொண்டு வரும் அழகு மலர் புயல்

வங்கக் கடலின் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். புதிய புயலுக்கு ‘மோன்தா’ (Montha) என பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரை செய்துள்ளது. இதற்குப் பொருள் ‘அழகு மலர்’ ஆகும். அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு, வட கிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். […]

சென்னையில் இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று இரவு மிதமான இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதியில் ஒரு புதிய பருவமழை தாழ்வழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைப் பகுதி மட்டுமல்லாமல், மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

வங்க கடலில் புயல்

வங்கக்கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது இதனால் தமிழகத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள்

தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கிழக்கு இந்திய பெருங்கடல், தென் சீனக்கடல் பகுதிகளில் நிலையான அலைவாக நீடித்து வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், வெப்பமண்டல காற்று குவிதல் இந்தாண்டு தமிழகம் மற்றும் இலங்கை அட்சரேகை அருகிலேயே நீண்ட நாட்கள் நீடித்து அடுத்தடுத்து நிகழ்வுகளை தமிழகம் நோக்கி நகரச்செய்யும். இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகும்’ என தெரிவித்துள்ளார். மேலும், தாழ்வுப்பகுதி, மண்டலம், […]

காற்றழுத்த மண்டலம் வலுப்பெறுகிறது

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் 19ம் தேதி முற்பகல் வாக்கில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கரையை கடக்கக் கூடும் என- இந்திய வானிலை ஆய்வு மையம் […]

அமெரிக்காவில் மழை வெள்ளத்துக்கு 79 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் திடீரென மழை கொட்டியது இதில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஊரை மூழ்கடித்தது திடீர் வெள்ளம் காரணமாக 28 குழந்தைகள் உட்பட 79 பேர் பலியாகி உள்ளனர் இன்னமும் பலரை காணவில்லை காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற திடீர் மழை வெள்ளம் ஏற்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

மீண்டும் தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

நாளை ஜூன் 24 முதல் கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்படுகிறது. கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இம் மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். வால்பாறை நீலகிரி தவிர வேறு எங்குமே கனமழைக்கு வாய்ப்பு இல்லை. தென்காசியை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு விட்டு விட்டு […]

சென்னைக்கு மழை எச்சரிக்கை

🚩 ஆந்திரா மாநிலம் (திருப்பதி) கர்நாடகா மாநிலம் ( பெங்களூரு) ஆகிய இடங்களில் ஒரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்

குற்றால அருவிகளில் குளிக்க தடை

கனமழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், சில இடங்களில் 24 மணி நேரத்தில் சில நாட்களில் 200 மிமீ (அதிக மழை) பெய்யக்கூடும். நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.