பாதுகாப்பான இடத்துக்கு புலம் பெயரும் பொதுமக்கள்
சென்னை அண்ணா சாலையை சூழ்ந்த வெள்ளம்
சென்னையில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. ▪️ 2015ம் ஒப்பிடும்போது தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். ▪️ சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ▪️ 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் […]
சென்னை கிண்டி வேளச்சேரி சாலையில் நேற்று நடைபெற்ற நிலச்சரிவு/ மழைநீர் விபத்தில் சீக்கிய 3 க்கும் மேற்பட்ட நபர்களின் உடல்களை மீட்கப்படவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம்

சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்
மழை பாதித்த சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மொத்தம் 8,596 மின்வாரிய பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்
8 மாவட்டங்களில் மருத்துவப் பணியில் 4,320 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 236 நிவாரண மையங்களில் உள்ள 9,634 பேருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவையானவை வழங்கப்பட்டு வருகின்றன. மீட்புப்பணிக்கு அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றி வரும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சென்னை காரப்பாக்கத்தில் மழைநீர் பாதிப்பால் சிக்கிய நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்னு விஷாலை மீட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் !
மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்க உள்ளோம்

4 நாட்களில் முழு நிவாரணமும் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் – ரூ.4,000 கோடியில் பணிகளை மேற்கொண்டோம்; அதனால்தான் சென்னையில் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“சென்னையில் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”
மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தகவல்.. உடன்டியாக ரூ.5000 கோடி நிவாரணம்..” மாநிலங்களவையில் எதிரொலித்த மிக்ஜாம் புயல்* பார்லி.,யில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், தமிழக புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். பாதிப்புகளை சரி செய்ய ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
‘நிறைய வீடுகள் மூழ்கி போயிருக்கு… எல்லாரும் சாப்டாங்களான்னு கூட தெரியல.. பாக்கவே பயங்கரமா இருக்கு..’ மழை வெள்ளத்தால் தவிக்கும் தாம்பரம் வரதராஜபுரம் மக்கள், உதவியை எதிர்நோக்கி