சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு தேங்கி நிற்கும் மழை வெள்ளம்.
தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்
மிக்ஜாம் புயல் பாதிப்பு.. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு..!!

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட கார்களை பழுதுபார்க்க, மாருதி, மகிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது; மழை பாதிப்பு: கார்களை பழுது பார்க்க சிறப்பு ஏற்பாடுசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள டீலர்கள் மூலம் கார்களை பழுது பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் குறுஞ்செய்தி மூலமாகவும் கார்களின் உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது. கார்களை உரிமையாளர்களின் வீடுகளில் இருந்து சர்வீஸ் மையங்களுக்கு எடுத்துச் செல்ல […]
சென்னை காரப்பாக்கத்தில் மழைநீர் பாதிப்பால் சிக்கிய நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்னு விஷாலை மீட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ..
மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]
தமிழ்நாட்டில் வருகிற 9 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வருகிற 9 ஆம் தேதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430 மணி அளவில் கடந்தது. 06.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.12.2023 மற்றும் 08.12.2023: தமிழகத்தில் ஒருசில […]
காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமியை டிரக்டரில் அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்.
மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]
சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட தடுப்புகள். இடம் சென்னை சென்ரல் அருகே.
அடுப்பு மற்றும் சமையலுக்கு தேவையானபொருட்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும்பெண். இடம் & வியாசர்பாடி