சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும் அபராதம் இன்றி மின்சாரம் செலுத்தலாம் என்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430 மணி அளவில் கடந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் […]

பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!

பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார். அடையார் ஆற்றில் 37,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் […]