அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு, திரு.வி.க நகர் மெயின் ரோடு மற்றும் திரு.வி.க. நகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது

இதனை அறிந்து 38 வது மாமன்ற உறுப்பினர் திருமதி சரண்யா மதுரைவீரன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு பாதாள சாக்கடையில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. அருகில் சி.ஆர்.மதுரைவீரன்

முதல் டி20 போட்டி மழையால் ரத்து

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து. மழை நிற்பதற்காக காத்திருந்த நிலையில், டாஸ் போடாமலே ஆட்டம் ரத்து என அறிவிப்பு

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது

நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் – தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் Siva_Kartikeyan, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் – நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் – இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!

மழைநீர் வடியாததால் 4 பள்ளிகளுக்கு விடுமுறை

மழைநீர் வடியாத காரணத்தால் சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று விடுமுறை

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது

தற்போது மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 20,000 புத்தகங்கள் சேதுமடைந்துவிட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. 32 பள்ளிகளில் மட்டும் சுவற்றில் தண்ணீர் ஊறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம். மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் […]

மீண்டும் மழை

சென்னை கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், செனாய் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை..

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை; அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, ராமநாதபுரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், செனாய் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது!

சென்னை அருகே கூடுவாஞ்சேரி அருள்நகர் – ஆதனூர் இணைக்கும் தரைபாலம், காமாட்சி நகர், பவானியம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு. சுமார் 5000க்கும் அதிகமானோர் கடும் பாதிப்பு!