தொடர் மழையால் விருதுநகரில் ரயில்சேவை நிறுத்தம்
சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,சென்னை- திருச்செந்தூர் ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்ப்பு!
தொடர் கனமழை காரணமாக நெல்லை – தென்காசி இடையேயான பேருந்து சேவை நிறுத்தம்!
கடந்த 20 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 35 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 59 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது!
தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது
தொடர் கனமழையால் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் தூத்துக்குடியில் மழை விடாமல் பெய்வதால் ரயில்கள் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது. பயணிகள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் ரயில் நிலையங்களில் தவிப்பு
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் துண்டிப்பு

திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தம் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடக்கம் திருச்செந்தூரில் மின்சாரம் இணைப்பு, தொலைதொடர்பும் துண்டிப்பு வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க மக்கள் கோரிக்கை.
600 பேரின்உயிருக்கு ஆபத்து..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஆழிக்குடி கிராமத்தைவெள்ளம் சூழ்ந்தது. இதனால், அக்கிராமத்தில் உள்ள சுமார் 600க்கும்மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.அனவரதநல்லூர்-ஆழிக்குடி சாலையில் ஒரு கி.மீ. தொலைவிற்கு வெள்ளம்சூழ்ந்துள்ளது. தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால், உடனே தங்களைகாப்பாற்ற வேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிக்கித் தவித்த 16 பக்தர்களை வனத்துறை மற்றும் தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டு மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர்.
தூத்துக்குடிக்கு வரும் சாலை வழித்தடங்கள் அனைத்தும் நீர் வரத்துகளால் துண்டிக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய வாகன போக்குவரத்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.. மூன்றாவது மைல் மற்றும் அந்தோணியார் புரம் பகுதிகளில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் இருபுறமும் வழிந்து ஓடுகிறது.. அதேபோல திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாற்றுவடை அருகே சாலையின் இரு புறங்களிலும் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகின்றது.. அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய அந்த வாகனமானது தூத்துக்குடி கோமதிபுரம் அருகே உள்ள அந்த உப்பாற்று ஓடை மற்றும் கண்மாயினுடைய […]