தென்மாவட்ட கன மழை – நுகர்வோர்கள் அவசர உதவிக்கு மின்னகம் எண்ணை 94987 94987 அழைக்கவும்
தொடர் மழை காரணமாக ஆம்னி பேருந்துகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆம்னிபேருந்துகள் இயங்காது தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 300 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்த 300 ஆம்னி பேருந்துகளும் இன்று நிறுத்தம்.
“அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு”

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
தொடர் மழையால் ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
கனமழை காரணமாக தம்கரம் – ஈரோடு எக்ஸ்பிரஸ் 🚉 தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி ரயில் ( சிறப்புப் பயணம்) 🚉 திருநெல்வேலி- தூத்துக்குடி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் ( சிறப்புப் பயணம்) 🚉 தூத்துக்குடி – திருநெல்வேலி முன்பதிவு செய்யப்படாத ரயில் ( சிறப்புப் பயணம்) ஆகியவற்றின் சேவைகள் இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தல்;
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தல்
தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர்வரத்து உயர்வு;

வைகை அணைக்கு மூளை வைகை ஆற்றில் இருந்து 6,800 கனஅடி நீர் வரத்து; முல்லை பெரியாறு அணையில் இருந்து 6,300 கனஅடி நீரும், போடி கொட்டக்குடி ஆற்றில் இருந்து 1,900 கனஅடி நீரும் வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது; அணையின் நீர் இருப்பு 4,753 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், 3,169 கனஅடி நீர் வெளியேற்றம்
திருச்செந்தூர்: காயல்பட்டினத்தில் 60 செமீ மழை பதிவு
தொடர் கனமழை காரணமாக வந்தே பாரத் ரயில் சேவை ரத்து

நெல்லை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து விடாமல் பெய்து வரும் கனமழையால் நெல்லை ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் அதி பயங்கர கனமழை பெய்துள்ளது
காயல்பட்டினத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 86 செமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. திருச்செந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 67 செமீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரையில் 60 செமீ மழை பதிவாகியுள்ளது.
தொடர் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம்
முத்துநகர் மற்றும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி