ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் கனமழையால் பரிதாபம் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸப் எண்கள் அறிமுகம்
மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸப் எண்கள் அறிமுகம் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன
மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன-கார்த்திகேயன், நெல்லை ஆட்சியர்.
மழை பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு தென் மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் ஆய்வு மழை பாதிப்புகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை ஆலோசனையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பங்கேற்பு 4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்பு
தென்மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் குழுவினர் வருகை

தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மதுரை வந்தனர். கார் மூலம் புறப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை-எடப்பாடி பழனிசாமி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது. சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி.
ரயில் பயணிகள் மீட்பு பணி துவங்கியது

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேரும் தற்போது முதலுதவி சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் தண்டவாளத்தின் அடித்தளம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் இப்பாதையில் வழக்கமாக செல்லும்
நெல்லையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 18 பைபர் படகுகள் ஈடுபட்டுள்ளன
மேலும் 30 படகுகள் வரவழைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்
கனமழை எதிரொலி, சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 4 விமானங்கள் ரத்து