கேரளாவில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்

பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும் (மே 22), நாளையும் (மே 23) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (மே 22) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை தயார்

நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு குமரி, நெல்லை, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா 3 குழுவினரும், கோவைக்கு ஒரு குழுவினரும் அனுப்பி வைப்பு குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 22ம் தேதி வரை கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை

மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை எச்சரிக்கையால் 4 மாவட்டங்களுக்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படை!

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை =இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு =இந்திய வானிலை ஆய்வு மையம் 18 முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் சேலையூர் பகுதிகளில் லேசான மழை தூறல்

புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி சென்னை புறநகர் பகுதிகளில் அக்னி வெயில் சுற்றடெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் கோடை மழை பெய்து வருவம் சூழலில் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால பாதிக்கபட்டு வந்த […]