31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, ஆகிய மாவட்டகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

BREAKING | அரக்கோணத்தில் இருந்து 5 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை 5 மாவட்டங்களுக்கு விரைகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைகிறது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா உள்பட 5 மாவட்டங்களுக்கு மீட்புக் குழு விரைகிறது.

10ம் தேதியுடன் பருவமழை நிறைவு

10-ந்தேதிக்கு (நாளை மறுதினம்) பிறகு மழைக்கான வாய்ப்பு அப்படியே குறையத் தொடங்குவதால், வடகிழக்கு பருவமழை அதனுடன் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது