29.11.24 தற்போதைய நிலையில் பெங்கல் புயல் 10 கி.மீ வேகத்தில் நகருகிறது

புயலின் வேகம் நாகையிலிருந்து 290 கி.மீ சென்னையிலிருந்து 340 கி.மீ புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ இலங்கை திரிகோணமலையில் இருந்து 290 கி.மீ ஆகிய தொலைவில் புயல் நகருகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை […]
சென்னை: பட்டினப்பாக்கத்தில் வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படும் கடல்..!

கடல் அலை வழக்கத்தை விட 3.7 மீ வரை மேலெழும்பக்கூடும் என இந்திய கடல்சார் தேசிய மையம் எச்சரிக்கை.
புயலாக மாறி கரையை கடக்கும் – வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் FENGAL புயல் உருவாகி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (நவ.30) மதியம் கரையை கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அழுத்தம் பெற்று புயலாக மாற உள்ளது..
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.28) இரவு வரை மிதமான மழை பெய்யும்

இந்த கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை!
BREAKING || சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவடங்களிலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதில் தொடரும் தாமதம்

2 கி.மீ. வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம் 30ஆம் தேதி மதியத்திற்கு பின் கரையை கடக்க வாய்ப்பு காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி கரையை கடக்கும் வருகிற 29, 30 தேதி ஆகிய இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்திற்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

“வரும் 29,30 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும்” வானிலை ஆய்வு மையம் தகவல் “கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும்” தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் வானிலை மையம்இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 29ம் தேதி வரை வங்க கடலில் புயலாகவே நீடிக்கும்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும்

நாகையில் இருந்து 400 கி.மீ. தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை
புயல் எச்சரிக்கை – பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

“சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்” புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்