10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜனவரி 24) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, சனிக்கிழமை (ஜன. 24) […]

விழுப்புரம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட கனமழை: மயிலத்தில் 51 செ.மீ. கொட்டியது

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நெ.பில்ராம்பட்டு கிராமத்தில் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்​தின் விழுப்பு​ரம், கடலூர், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களும், புதுச்​சேரி​யும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் அதிகபட்​சமாக 51 செ.மீ. மழை கொட்​டிய​தால், பல பகுதிகள் வெள்​ளக்​காடாகின. பாதிக்​கப்​பட்ட பகுதி​களில் ராணுவத்​தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர். வங்கக்​கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை […]

மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் – தமிழக அரசு

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பகல் 1 மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திலும் கனமழை தொடரும் -வானிலை ஆய்வு மையம்

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இடைவிடாது பெய்யும் கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

சென்னைக்கு வந்த விமானம் மோசமான வானிலையால் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 1 வரை அதீத கனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை.