தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!
தமிழகத்தில் அடுத்த ஆறு நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றுடன் விடைபெறும் வடகிழக்கு பருவமழை.
நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும், இந்த மாதம் இறுதி வரை பெரிதாக மழைக்கு வாய்ப்பு ஏதும் தென்படவில்லை,மீண்டும் ஜனவரி மாதம் குளிர்கால மழை வாய்ப்பு உருவாக்கலாம். தமிழகத்தில் நாளை முதல் பனியின் தாக்கம் அதிகரிக்கும். இலங்கைக்கு தெற்கு பகுதிகளில் நிலவி வரும் காற்று சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 3, 4 நாட்களுக்கு இலங்கையில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழையும் ஆங்காங்கே கனமழையும் தொடரும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டுக்கு மீண்டும் புயல் எப்போது?
இந்த மாத மத்தியில் தமிழகத்தில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. இது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வருகிற 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரமாகும். 15 ந்தேதியும் 17 – ந் தேதியும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்போது தென்மாவட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்றார்
வங்கக்கடலில் உருவானது ‘டிட்வா’ புயல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது. புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (DITWAH) என பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் – இந்திய வானிலை […]
ரெட் அலர்ட் – முதல்வர் உத்தரவு.
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட். கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களுக்கு விரைந்து செல்லவும், மீட்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவு.
இன்றே உருவாகிறது புயல்
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]
தமிழகத்தில் நாளை கனமழை
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று (நவ.27) வடமேற்காக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (நவ.28) கடலோர தமிழகத்தில் […]
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.*
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்காலில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். பாம்பன், ராமேஸ்வரம் ஆகிய 2 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு |
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாக வும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட் காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும். அந்தவகையில் வடகிழக்கு டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவ தெரிவிக்கின்றனர். லான […]
மோன் தா புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லை
வங்கக் கடலில் நிலவி வரும் ‘மோன்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.புயல் ஆந்திராவை நோக்கி செல்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை சென்னையில் மட்டும் காலையில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது