ரயில்கள் தாமதத்தால் பயணம் செய்யாதோருக்கு முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும்: ரயில்வேதுறை தகவல்

ரயில்கள் தாமதத்தால் பயணம் செய்யாதோருக்கு முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்களில் பயணம் செய்யாதவர்களுக்கு முழு பணமும் திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யாத பயணிகள் நிலைய அதிகாரிகளிடம் காலதாமத சான்று பெற்று பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது. பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி காருக்கு கூடுதல் வசூல்

தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் தொடர்வண்டிகள் தாம்பரம் இரயில் நிலையத்தில் நிற்கின்றன. மிக நீ……..ண்ட நடைமேடையை முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் எளிதாக கடக்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கட்டணம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இருபது ரூபாய் வசூல் செய்கிறார்கள். கேட்டால் போர்டில் பத்து ரூயாய் என்பதை இருபது ரூபாய் என இன்னும் மாற்றி எழுதவில்லை என்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்ற […]

தாம்பரம் அருகே ரெயில் மோதி 2 பேர் பலி

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் ரயில் தண்டவளாத்தில் 45ந்து வயது மதிக்க தக்க நபர் பொதிகை விரைவு ரயில் மோதியதில் இரண்டு துண்டுகளாக உடல் இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர். அதே போல் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை […]

அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணம் குறைப்பு.

25% வரை கட்டணம் குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு. நேற்றைய தினம் 10% வரை கட்டணம் குறைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் இன்று 25% வரை கட்டணம் குறைப்பு. 50%-க்கும் குறைவாக முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில்களிலும் உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தல்- ரயில்வே வாரியம்.

ரயில் பாதையில் நின்று, ‘செல்பி’ எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-தெற்கு ரயில்வே.

ரயில்வே பாதையை கடப்பது, ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில், ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால், பலர் உயிர் இழக்க நேரிகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று, ‘செல்பி’ எடுத்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது, ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்- தெற்கு ரயில்வே.