சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு சம்மந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கரூரைச் சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில் ஜவுளி, கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார். ரேஷன் பொருள் வினியோக முறைகேடு, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை வேப்பேரி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆர்.ஏ […]

பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் […]