கரூரில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் சகோதரி வீட்டில் IT சோதனை
கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது!
ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு தாள் கசிவு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.இது தவிர தௌசாவில் உள்ள மஹூவா தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உட்பட மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் […]
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் சோதனை நடந்து வருவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

துணை ராணுவ படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் வெயில் சுட்டெரிப்பதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் சோதனை 6 கார்கள் மற்றும் 1 டெம்போ டிராவவர் வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ளது, கணக்கில் காட்டப்பட்டுள்ளது? என்பது குறித்து ஆய்வு
கோவை தக்ஷா கட்டுமான நிறுவனத்தின் 3 இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை நடத்தி வருகிறது.

வடவள்ளி பகுதியில் உள்ள தக்ஷா பிராப்பர்டி அண்ட் டெவலப்பர் உரிமையாளர் மோகன் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை

அவரது அலுவலகம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்சோதனை துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை என தகவல்.
செந்தில் பாலாஜியின் சகோதரரின் 2.49 ஏக்கர் சொகுசு பங்களா முடக்கம்.. அமலாக்கத் துறையினர் அதிரடி

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் சொகுச பங்களாவை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார். இவர் கரூர் – சேலம் புறவழிச்சாலையில் 2.49 ஏக்கர் பரப்பளவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அவருடைய மனைவி நிர்மலா பெயரில் இந்த வீடு கட்டப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாகவும் இந்த வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கிரானைட் கற்கள் […]