திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
சேலம் அருகே தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
பாலசுப்பிரமணியத்தின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியம் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர்.
G Square நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள G Square தலைமை அலுவலகம் உட்பட 10 இடங்களில் வருமான வரி சோதனை. அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை என தகவல்.
பல்லாவரத்தில் திமுக எம்பி கூரியர் நிறுவனத்தில் அமலாக்க பிரிவு சோதனை

சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினம் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கொரியர் டெலிவரி செய்யவும் இங்கிருந்து விமான நிலையத்திற்கு கொரியர் சேவைக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் எஸ்டி […]
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் தொழிலதிபர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொச்சி மற்றும் பெங்களூருவை சேர்ந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சென்னை ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் இரு மாநிலங்களை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார வாரிய துறையில் நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. நேற்றைய தினம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மின்வாரிய நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
கல்வி அதிகாரி வீட்டில் ரெய்டு – ரூ.3 லட்சம் பறிமுதல்

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.13,000 சிக்கியது. முதன்மை கல்வி அலுவலர் ராமனின் பதவிக்காலம் கடந்த 7ம்தேதியுடன் நிறைவடைந்தது. பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கியதாக தகவல்.
சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் ஆய்வு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் இல்லங்களில் சோதனை மக்களோடு மக்களாக வசித்து வரும் நபர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நிலையில் மாநில போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ சோதனை
கோவையில் காலை முதல் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

செளரிபாளையம் பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை 4 வாகனங்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் அடையாறு தலைமை அலுவலம், நிர்வாகிகள் வீடு என 2 இடங்களில் சோதனை சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம்,வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள், கல்லூரி, வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை தமிழகத்தில் மொத்தமாக 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை