ராகுல் வாகனம் மீது தாக்குதல்: கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங். வலியுறுத்தல்!

அசாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை தடுத்ததாக அம்மாநில பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்! அசாமில் இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கார்த்தி சிதம்பரம் பேசியதாக சர்ச்சை எழுந்தது. தமிழக காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை எனவும் கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சையானது

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை விமர்சித்த விவகாரம் ராகுல்காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..

நடிகரும் தேமுதிக நிறுவனருமான திரு விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை

நான் கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை இணைகிறேன், அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். இக்கட்டான காலத்தை கடந்து செல்லும் ஸ்ரீ விஜயகாந்த் குடும்பத்திற்கு என் அன்பும் ஆதரவும். -ராகுல் காந்தி-

நான் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும் போதெல்லாம், பாஜகவினர் பிரச்னையை திசைதிருப்ப முயல்கின்றனர்

இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினையை தூண்டி வெறுப்புணர்வை பரப்புகின்றனர்; தற்போது நாட்டின் முன்பு இருக்கும் ஒரே பிரச்னை சாதிவாரியான கணக்கெடுப்பு தான்”

வயநாடுக்கு இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது; ராகுல்

கேராளா, வயநாடு கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி எம்பி, “4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் என் தொகுதி மக்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் இக்கட்டில் சிக்கித் தவித்த போது, வயநாடு என்னை பாதுகாத்து, ஆதரவளித்தது. பாஜக அரசு என்னை எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும், எனக்கும், வயநாடுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது” என்றார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாளை காலை உதகை வருகிறார்

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல்காந்தி, உதகை செல்கிறார். உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்வில் பங்கேற்ற பின் தனது தொகுதியான வயநாடு செல்கிறார்.

“தேசத்தையும் , பாரத மாதாவையும் மணிப்பூரில் கொன்றுவிட்டனர்” – ராகுல் காந்தி கடும் தாக்கு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவி வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார். இதன் மீதான விவாதம் நேற்று காரசாரமாக நடைபெற்றது.காங்கிரஸ் தரப்பில் இன்று ராகுல்காந்தி பேசுவார் என […]

ஃபிளையிங் கிஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி

பெண் எம்பிக்கள் மற்றும் பெண் அமைச்சர்களை பார்த்து ராகுல் காந்தி ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாக பெண் எம்பிக்கள் பாராளுமன்ற சபாநாயகர் இடம் புகார் செய்துள்ளனர்.

தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வருகை

மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி காங்கிரசார் உற்சாக வரவேற்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை