ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக புதின் அறிவிப்பு

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விளாதிமிர் புதின் 5வது முறையாக அதிபராகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2030 வரை ரஷ்யாவின் அதிபராக புதின் நீடிப்பார். கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் பிரதமர் அல்லது அதிபராக புதின் பதவி வகித்து வருகிறார்.
அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : நாட்டு மக்களுக்கு புதின் மீண்டும் வலியுறுத்தல்

உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷியாதான். மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரஷிய அதிபர் புதின் அந்த நாட்டு மக்கள் குறைந்தது 8 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கடந்த 2022-ம் ஆண்டில், ரஷிய ராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், போரினால் ஏராளமான ரஷியர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அதிக அளவில் மக்கள் […]
ஆயுத சப்ளை தொடர்பாக புடினை சந்திக்க கிம் ஜோங் உன் முடிவு

மாஸ்கோ: தன்னிடம் உள்ள ஆயுதங்களை விற்பது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவும், வடகொரியாகவும் நட்பு நாடுகளாக உள்ளன. இரு நாட்டு தலைவர்களும் ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது அணு ஆயுதங்களை உக்ரைன் போரில் […]
பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் போனில் பேச்சு

பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலக வட்டார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இருவரும் செப்.,9, 10 தேதிகளில் டில்லியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக விவாதித்தனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் வரமுடியவில்லை என்பதை தெரிவித்ததுடன், தனக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்ஜிலாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் கூறினார். சமீபத்திய பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அளவிலான பிரச்னைகளையும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதின் இல்லத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புடினின் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்திற்கும் வுனுகோவோ விமான நிலையத்திற்கும் இடையிலுள்ள ஒடின்ட்சோவோ நகரில் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதிபர் இல்லத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் எப்படி தீ பிடித்தது என பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.