காரில் விஷம் குடித்து 5 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோகம்; உருக்கமான கடிதம் சிக்கியது

திருமயம்: புதுக்கோட்டை அருகே காரில் அமர்ந்தபடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலத்தை சேர்ந்த இவர்கள், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம், திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையோரம் உள்ள நகர சிவ மடம் எதிரே நேற்றுமுன்தினம் இரவு முதல் ஒரு கார் நின்றிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் சிவமடத்தின் வாட்ச்மேன் அடைக்கலம் (70), அந்த காருக்கு அருகே […]