புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலம்

சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவினங்களுக்கான ரூ.4,634 கோடி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஒப்புதல்கள் பெறுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற சட்ட முன் வரைவை அமைச்சர் நமச்சிவாயம் தாக்கல் செய்த நிலையில் அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம். புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாதகாலத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா சட்ட வடிவம் பெறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது;

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன் முயற்சிகள் பாரத தேசத்துப் பெண்களின் அரசியல், சமுதாய, பொருளாதார விழிப்புணர்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதியான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமித் ஷா ஆகியோருக்கு பெண்கள் அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்- புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி அரசு சார்பில் ஊழியர்களுக்கு ரூ.11,000 போனஸ்

புதுச்சேரியில் லாபத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000 ஆயிரம் வரை தீபாவளி போனஸாக வழங்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு. கருணைத்தொகை குறைந்தபட்சம் ரூ.7,000 வழங்கலாம் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது புதுச்சேரி அரசு.

ப.கண்ணன் மறைவு – முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி அரசியலில் ஆளுமைமிக்கத் தலைவராகத் திகழ்ந்த ப. கண்ணன் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது; அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த அவரது இழப்பு புதுச்சேரி அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்

புதுச்சேரி : முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார். புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்கவராக திகழ்ந்த முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த […]

புதுச்சேரியில் மருத்துவ சேர்க்கை குளறுபடி விவகாரத்தில் சென்டாக் அதிகாரிகள் 2 பேர் நீக்கப்பட்டனர்

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு, இணை ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை தாமதமாக நடத்திய விவகாரத்தில் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!

புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும்.புதுச்சேரி, புதுவை விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. மேலும் கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும். கல்லறை திருநாளுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிப்பது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு கல்லறை திருநாளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் […]

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரியின் பாஜக தலைவராக சாமிநாதன் இருந்துவருகிறார். இந்த நிலையில், சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார். புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகலாந்து, புதுச்சேரியின் பாஜக மாநில தலைவர்கள் […]