புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தற்போதைய நிலை தொடரும் என மத்திய அரசு தெரிவித்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். டெல்லிக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம் – முதல்வர் ரங்கசாமி.

வாட்ஸ் அப் கால் மூலம் வந்த பெண்ணால் அதிர்ச்சி; புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதனுக்கு வாட்ஸ் அப் கால் மூலம் வந்த பெண்ணால் அதிர்ச்சி இணைப்பை துண்டித்த சில நிமிடங்களில், வீடியோ காலின் ஸ்கிரீன் ஷாட்டை அவருக்கு அனுப்பி, பணம் தரவில்லை என்றால் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டல்! சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்!

புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகஸ்ட் 7,8ம் தேதிகளில் புதுச்சேரி செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சென்டர் மீடியனில் உள்ள செடிகள் வெட்டி அழகுபடுத்தப்படுகிறது. மேலும், சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது.